வெளியார் தலையீடு எதுவும் இருக்காது – நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை – மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவிப்பு!
Saturday, April 9th, 2022சர்வதேச நாணயத்துக்கான உடன்பாட்டு கடிதம், தொழிநுட்ப நடவடிக்கைகளின் பின்னர் அனுப்பப்படும் எனவும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தனிமனிதனால் நாட்டின் பொருளாதாரத்தை ஒரேடியாக மேல் நோக்கி நகர்த்த முடியாது. கொள்கை மாற்றம் மாத்திரம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையும் அவசியமாகும். அதேபோன்று தம்மால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை எனவும் தெரிவித்த அவர் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை சீர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெளியார் தலையீடு எதுவும் இருக்காது என்ற அடிப்படையின் கீழேயே இந்த பதவியை தாம் ஏற்றுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சர்வதேச நாணய நிதியத்துடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று (08) இரவுமுதல் அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று இரவுமுதல் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கோரப்படும்.
இதேவேளை, ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய கடன்களை செலுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|