வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகள் இடம்பெறுகிறது – பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2016

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவரின் மரணம் தொடர்பான  விசாரணைகள் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் இருவர் கடந்த வியாழக்கிழமை (20) இரவு உயிரழந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழ் அரசியல் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டதற்கு பதில் அளிக்கையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இடம்பெற்ற சம்பவத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கவலையை வெளியிட்டதுடன், தகவலை கேள்வியுற்றதும் உடனடியாக செயற்பட்டதாகவும் தெரிவித்தள்ளார்.

068d43e4c514e1b6cc6d4e14b605cb38_L

Related posts: