வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Sunday, January 2nd, 2022

இலங்கை பணியாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதில் ஜப்பான் மற்றும் இஸ்ரேலில் புதிய தொழில் வாய்ப்புகள் உள்ளடங்குவதாக அதன் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துக் கொள்ளுமாறு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: