வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!
Wednesday, September 7th, 2022வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியகத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை 2,885 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் நாட்டின் அனைத்து 44 பொலிஸ் பிரிவுகளுக்கும் பிரதிப் பொலிஸ்...
வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
ஆலயங்களில் திருவிழாக்கள், பூஜைகளுக்கு அனுமதி!
|
|