வெளிநாட்டு பணியாளர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகள் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்!

Sunday, November 8th, 2020

ஜப்பான், கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி இளைஞர் யுவதிகளை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளும் உள்வாங்கப்பட்டு மொழிரீதியான பயிற்சிகளும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகளும் குறித்த இரு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமிய சமூக கட்டமைப்பை அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில். விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பிரசன்னத்துடன் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: