வெளிநாட்டு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் – 300 அமெரிக்க டொலராக உயர்வு!

எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், 300 அமெரிக்க டொலராக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.மேலும் பல நாடுகளுடன் இது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.இதற்கமைய, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் வெளிநாட்டு பணியாளர்களுக்காக குறித்த குறைந்தபட்ச ஊதியத்தினை அமுல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கம்பரலிய திட்டத்தில் மோசடி: வடமராட்சி மக்கள் ஆதங்கம்!
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 10 ஆம் திகதிவரை விண்ணப்பி...
விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!
|
|