வெளிநாட்டு பணவனுப்பல் இரு மாதங்களில் 800 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணுவனுப்பல் மொத்தமாக 844.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு பணவனுப்பல் 464.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது 82% அதிகரிப்பாகும்.
அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் பெறுமதி முறையே 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
இதற்கிடையில், கடந்த 2022 டிசம்பரில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் 475.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது 2021 ஜூன் மாதத்துக்கு பிறகு, ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச தொகையாகுமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|