வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க வாய்ப்பில்லை – அமைச்சர் மங்கள சமரவீர!

நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கவாய்ப்பு இல்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேவெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நீதித்துறை பொறிமுறை தொடர்பில், சர்வதேச நீதிபதிகளை நியமிக்குமாறுமுல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுவருகின்றது.
ஆனால்,சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கம்அறிவித்து வருகின்றது. இதேவேளை, 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கு இரண்டு வருட கால அவகாசம்கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகுதியான பாடசாலை அதிபர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை முடிவு!
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை நிறுத்தம்!
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!
|
|