வெளிநாட்டு நிதியுதவி இலங்கைகுஅதிகரிப்பு !

Sunday, August 13th, 2017

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவி இலங்கைக்க அதிகரித்துள்ளதாகவும் இதன்படி இவ்வருடத்தில் முதன் நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 24 கோடி 40 இலட்சம் அமெரிக்க டொலருக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது..

இதில் 17 கோடி 40 அமெரிக்க டொலர்களுக்கான கடன் உடன்படிக்கையும் இடம்பெற்றுள்ளது. எஞ்சியவை நேரடி முதலீடாக கிடைத்துள்ளது.

இருதரப்பு மற்றும் பலதரப்பு என்ற ரீதியில் இந்த நிதியுதவி கிடைத்துள்ளது. ஆகக் கூடுதலான நிதியுதவியை உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி பிரிவு வழங்கியுள்ளது. இதன் பெறுமதி 12 கோடி அமெரிக்க டொலர்களாகும்.

Related posts: