வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலரே இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர் – யாழ்ப்பாணத்தில் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டு!

Monday, April 12th, 2021

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலரே இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என தெரிவித்தள்ள இராணுவத்தளபதி சவேந்திர சில்வா வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கென இங்குள்ளவர்களுக்கு நிதிகளையும் வழங்கி  வருகிறவர்கள் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்ட ஒருவருக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் நன்கு அறிவார்கள்.

அதேபோன்று இலங்கையின் முப்படையினரும் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாட்டையே முன்னெடுக்கிறார்கள் எனவும் யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்கள் நன்கு தெரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இங்குள்ளவர்களுக்கு காசுகளை அனுப்பி இங்கே இந்த இராணுவம் கொடுமையானது இராணுவம் இங்கே தேவையற்றது எதிரான பொய் பிரசாரம் முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முப்படையினரும் வழங்க தயாராகவே இருக்கின்றோம் என தெரிவித்திருந்த இராணுவத் தளபதி புத்தாண்டை முன்னிட்டு இன்றையதினம் தமிழ்குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக் கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினர் ஆகிய தாம் பெருமைப்படுகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை யாழ். மாவட்டத்திற்கு இன்று நான் விஜயத்தினை மேற்கொண்டு மாவட்டத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் கொரோனா நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளதும்ன அதை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்திருந்தேன்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் தமிழ் சிங்கள புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: