வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Wednesday, May 29th, 2019

நாட்டின் பாதுகாப்பு நிலை உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிபடியாக அதிகரித்து வருவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை தெரிவித்தள்ளது.

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக இலங்கையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நம்பிக்கை அதிகரித்திருப்பதாக அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டுக்கு 1500 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இவர்கள் ஆசிய நாடுகளை மாத்திரம் சேர்ந்தவர்கள் அல்ல. மேற்குலக நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வர ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு நிலைமை உறுதி செய்யப்பட்டதுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மத்தியில் நம்பிக்கையும் வலுவடைந்துள்ளது.

அது மாத்திரம் அன்றி சர்வதேச ரீதியில் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இலங்கை சுற்றுலா துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: