வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Friday, February 10th, 2023

இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 26 ஆயிரத்து 506 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த 07 ஆம் திகதி வரை வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 51 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 25 சதவீதமானவர்கள் ரஷ்யர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: