வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பனம்!

Thursday, January 26th, 2017

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய செயலகம் ஒன்று சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் முதன்முறையாக வெளிமாவட்டமான யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இன்று காலை யாழ்மாவட்ட செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது இங்கு பணியாற்றுவதற்காக நான்கு பேருக்கான நியமனக்கடிதங்களையும் அமைச்சர் வழங்கினார். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அவர்களின் குடும்பத்தினரின் உதவிகள் புலம்பெயர் பணியாளர்களின் இழப்பீடுகள் நாடு திரும்பியோருக்கான உதவிகள் போன்ற சேவைகளை இந்த அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வெளிநாட்டு தேவைகளுக்கான பிறப்பு இறப்பு கல்விச்சான்றிதழ் என்பன இந்த அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் கலந்டதுகொண்ட முக்கியஸ்தர்களுடன்  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கா வேலும்மயிலும் குகேந்திரன் வி.கே(ஜெகன்) கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed

unnamed (1)

unnamed (2)

Related posts: