வெளிநாட்டுப் பணிப் பெண்களுக்கு புதிய காப்புறுதி திட்டம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Saturday, January 14th, 2023

மத்திய கிழக்கு நாடுகளுக்கு, வீட்டு வேலைக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக, புதிய காப்புறுதி முறைமையை அறிமுகப்படுத்த, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

நாளைமுதல், இந்தப் புதிய காப்புறுதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர் பெண் பணியாளர்களை, ஆட்சேர்க்கும் தொழில் தருநர்களினால், இந்த காப்புறுதி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக, குறித்த பெண்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தங்களைப் பதிவுசெய்து கொள்வதற்காக, குறித்த காப்புறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

குவைட், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், பஹ்ரைன், ஜோர்தான், லெபனான் முதலான நாடுகளுக்கு வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள், தகுந்த காப்புறுதியைத் தெரிவுசெய்ய முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: