வெளிநாட்டில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கும் வாக்குரிமை!

வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள், வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் என்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த முறைமையை இலங்கை தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் நடைமுறைப்படுத்த உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் டதெரிவித்துள்ளார்.
குறித்த முறையினை அமுல்படுத்த வெளிநாட்டில் உள்ள இலங்கை பிரஜைகள் வாக்குப் பதிவு செய்வதற்கான சட்டங்களை வகுக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.எனினும் இதற்குத் தேவையான சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை - எகிப்து இடையே பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை!
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் - சுகாதார அமைச்சு அறிவிப...
மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் வழங்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!
|
|