வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் PCR பெறுபேறு – எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, September 23rd, 2021

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமைமுதல் இதனூடாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதனூடாக பிசிஆர் பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் வரையில் கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவோரிடம் அதிக கட்டணங்களை வசூலிக்கும் மோசடி செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: