வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி அவசியம் – சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அறிவுறுத்து!

வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் எந்தவொரு இலங்கை பிரஜையும் அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜை ஒருவரை இலங்கை பிரஜை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாயின் இதற்கு முன்னர் உரிய விசா அனுமதி பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரம் அவசியமாக காணப்பட்டது.
எவ்வாறாயினும் வெளிநாட்டு பிரஜையை இலங்கை பிரஜை ஒருவர் திருமணம் செய்து கொள்ளும்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|