வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Wednesday, November 8th, 2023

வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஷங்ரிலா ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு காலி முகத்திடல் நிலத்தை விற்பனை செய்ததன் பின்னர் எந்தவொரு நிலத்தையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இருந்தபோதிலும், அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக  நிலங்களை  குத்தகை அடிப்படையில் வழங்க முடியும். அத்துடன், முதலீடுகளைப் பெறுவது மிகவும் முக்கியம் என சுட்டிக்காட்டிய அமைச்சர்,

நாட்டில் காணிகளை வைத்துக் கொண்டு அதனூடாக வருமானத்தை ஈட்டாவிட்டால், நாட்டின் பொருளாதாரப் பொறிமுறையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்றும்  அவர் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: