வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் – சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு எச்சரிக்கை!

இலங்கையில் உள்ளவர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து மலேரியா நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மலேரியா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மலேரியா எதிர்ப்பு பிரசார அமைப்பின் பணிப்பாளரின் ஆலோசகர் சமூக வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரையில், நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர்களில் 21 மலேரியா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை, கடந்த வருடம் 30 மலேரியா நோயாளிகள் பதிவாகியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வருகை தரும் மக்கள், கொரோனா தொற்றுநோய் காரணமாக 14-நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 10 ஆவது நாளில் மலேரியா பரிசோதனை செய்யப்பட்டனர் என்றும் அங்கு 10 மலேரியா வழக்குகள் பதிவாகியிருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|