வெளிநாட்டவரின் வதிவிட நுழைவிசைவுக்கு புலனாய்வு பிரிவின் அனுமதி அவசியம்!

Wednesday, May 15th, 2019

வெளிநாட்டவர் இலங்கையில் வதிவிட நுழைவிசைவுகளை பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி அவசியம் என்ற நடைமுறை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வதிவிட நுழைவிசைவுகளை, பெற்றுக் கொள்வதுற்கு உள்துறை அமைச்சு மற்றும் பாதகாப்பு அமைச்சின் அனுமதிகள் பெறப்படும் நடைமுறைக்கு மாறாக, அரச புலனாய்வுச் சேவையும் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கையில்  நுழைவிசைவு காலவாதியான நிலையில் தங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, குடிவரவுத்திணைக்களம் கடுமையான நுழைவிசைவு நடைமுறைகளை கடைப்பிடிக்கவுள்ளது.

பன்னாட்டுப் பொலிஸாரின் (இன்ரபோல்) கறுப்புப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இலங்கையில் நுழைவிசைவை பெற்றுக் கொள்வதை தடுப்பதற்கே, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

Related posts: