வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ்ப்பாணத்தில் இன்றுமுதல் மீள ஆரம்பம்!

Wednesday, February 16th, 2022

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ். போதனா வைத்திய சாலையில் இன்றுமுதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ் கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பி.சி. ஆர். பரிசோதனைகளை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் நிலை காணப்பட்டது.

இதையடுத்து, கடந்த 9 ஆம் திகதி தொடக்கம் யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பி. சி. ஆர். சோதனைகள் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றுமுதல் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ். போதனா வைத்திய சாலையி மீளவும் முன்னடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: