வெளிநாடு செல்ல வேண்டாம் – சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அனில் ஜாயசிங்க!

Tuesday, March 10th, 2020

இலங்கையர்கள் வெளிநாடு செல்வதனை தவிர்க்குமாறு சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அனில் ஜாயசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொடர் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார அதிகாரிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்.

அது இலகுவான விடயம் அல்ல. பாரிய நடவடிக்கையில் ஒன்றாகும். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் வேகமாக பரவுகின்றது. எதிர்பார்த்ததனை விடவும் அதன் வேகம் அதிகமாக உள்ளது.

இலங்கையர்கள் முடிந்த அளவு வெளிநாடு செல்வதனை தவிர்க்க வேண்டும். தம்பதிவ யாத்திரைகள் உட்பட தவிர்க்குமாறு அறிக்கப்பட்டுள்ளது.

மீள் அறிவிப்பு வரை தம்பதிவ பயணங்களை முன்னெடுக்க வேண்டாம். இந்த தொற்று பரவுவதனை தடுப்பதற்கு முடிந்த அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் குறைந்தது 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: