வெளிநாடு செல்பவர்களுக்கு ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ள வசதி – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021

வெளிநாடுகளுக்கு பயணமாகவுள்ளவர்களுக்காக, ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளமுடியும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ICTA எனப்படும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம், சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அதற்கமைய, https://covid-19.health.gov.lk/certificate/  என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் இந்த ஸ்மார்ட் கொவிட் தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: