வெளிநாடு செல்பவர்களுக்கு விசேட அறிவித்தல்!

Friday, January 6th, 2017

திருத்தப் பணிகள் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று 6ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் பயணிகள் பயணிக்கவுள்ள நேரத்திற்கு சுமார் 5 மணி நேரத்திற்கு முன்னதாகவே, விமான நிலையத்திற்கு வருகைத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்துக்கு நுழையும் வாயிலுக்கு அருகில் பயணிகளின் பொருட்களை கையளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அவற்றை சோதிப்பதற்கான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், விமான நிலையத்தில் செயற்பட்டு வரும் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிரிவுகள் மேலதிகமாக அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த திணைக்களங்களில் பணியாற்றுவதற்கு மேலதிக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Katunayake-Sri-Lanka-7-900x450

Related posts: