வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கள் அதிகம் : ஆனால் தகுதியானவர்கள் இல்லை!  – அமைச்சர் தலதா அதுகோரள!

Thursday, July 20th, 2017

வெளிநாட்டில் வேலை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் எவரும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அமெரிக்காவில் 5000 தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றது எனவும் இந்த தொழில் வாய்ப்பிற்கு தகுதியானவர்கள் என மூன்று பேர் மட்டுமே தெரிவாகியிருந்தனர்.80 பேர் நேர்முகத் தேர்விற்கு தெரிவான போதிலும் எழுத்துப் பரீட்சையில் 3 பேர் மட்டுமே தேர்வாகினர் என்று குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதனை விடவும் அதற்கு தகுதியானவர்களை தேடிப்பிடிப்பதில் சவால்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

Related posts: