வெளிநாடுகளில் பரிதவித்த மேலும் ஒருதொகுதி இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 411 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இன்று காலை கட்டார் – தோஹாவிலிருந்து 332 பேர் , ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 21 பேர் மற்றும் இந்தியாவிலிருந்து 58 பேர் ஆகியோர் இன்று காலை கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப் படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமானநிலையத்திலுள்ள செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இத்தாலியில் தங்கியிருந்த மேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இத்தாலியின் மிலான் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1208 ரக விசேட விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பீ.சீ.ஆர் பரிசோதனை கூடத்தில் இவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இராணுவத்தினர் இவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|