வெளிநாடுகளில் பண்ணைகளில் வேலைசெய்வோர் எமது மண்ணில் அதனை மேற்கொள்வதில்லை – யாழ் மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத்தின் பிரதி பணிப்பாளர்!

Thursday, June 14th, 2018

கால்நடை வளர்ப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்த யாழ் மாவட்டம் தற்போது முற்றாக மாறியுள்ளது என யாழ் மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் உடுவில் அரசகால் நடைவைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் “தூய பாலை உற்பத்தி செய்வோம்”என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ  பணிப்பாளர் திருமதி வத்சலா அமிர்தலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

முன்னொரு காலத்தில் யாழ்ப்பாண மாவட்டம் கால் நடைவளர்ப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த மாவட்டமாகும்.  வைத்தியர்கள் பொறியிலாளர்கள் கூட வீடுகளில் ஆடு மாடுவளர்த்தார்கள். ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. தற்காலத்தில் கால் நடைவளர்ப்பிற்கு எங்களில் பலருக்கு நேரமில்லை என்கிறார்கள். தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நவீனதொலை தொடர்பு சாதங்களிலும் நேரத்தை கழிக்கிறார்கள் எங்கள் வாழ்க்கையை நவீன தொலைதொடர்பு சாதனங்களால் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாடு ஆடு வளர்ப்பில் ஈடுபடுவதை பலர்கௌரவ குறைவாக கருதுகின்றனர். வெளிநாடுகளுக்கு எம் மக்கள் அங்கு மாட்டு பண்ணைகளில் வேலைசெய்கிறார்கள். அங்கிருந்து பணம் அனுப்புகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பசுமாடுகளை வளர்ப்பதன் மூலம் அதிலிருந்துபல் வேறு நன்மைகளையும் பயன்களையும் எங்களின் வாழ்வாதாரத்துக்கான வருமானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

யாழ்  மாவட்டத்தில் ஒருநாளைக்கு பதினொரு இலட்சம் லீற்றர்பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதில் ஐந்து இலட்சம் லீற்றர்பால் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காககொண்டு செல்லப்படுகிறது. இந்த ஐந்து லட்சம் லீற்றர்பாலை வெளியேகொண்டு செல்லவிடாது தடுக்கவேண்டும் என்றார்.

Related posts: