வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் – நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்ப நிவாரணம் வழங்கவும் எதிர்பார்ப்பதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022

வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு சலுகைகளையும் பல ஊக்குவிப்புத் திட்டங்களையும் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் சில வரிச் சலுகைகள், வட்டியில்லா அல்லது மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் திட்டம் மற்றும் சலுகை அட்டை ஒன்றையும் மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அவர்களின் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பி, ஏதாவது நிவாரணத்தை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: