வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான விசேட நடமாடும் சேவை – அமைச்சர் தலதா  அத்துகோரள!

Thursday, March 9th, 2017

வெளிநாடுகளில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கான விசேட நடமாடும் சேவை திருகோணமலை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் நாளை ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா  அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவையின் இரண்டாம் கட்டம் நாளை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை திருகோணமலை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது.

இவர்களின் கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்கள் பற்றி இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையில் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அதிகளவிலான பொறுப்புக்கள் காணப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா  அத்துகோரள தெரிவித்துள்ளார்.இநத அதிகாரிகள் மாதாந்தம் உரிய குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு அனுப்புவது அவசியமாகும்.

Related posts: