வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களினால் நாட்டின் வருமானம் அதிகரிப்பு!

Thursday, February 2nd, 2017

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைப்பணியாளர்கள் கடந்த வருடத்தில் 1054.5 பில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் நளின் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இத்தொகை 2015ஆம் ஆண்டிலும் பார்க்க 11.11 வீத அதிகரிப்பாகும். 2015ஆம் ஆண்டில் 949 பில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை இலங்கை பெற்றிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் நளின் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

foreign-ministry-sri-lanka-350x175

Related posts: