வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 539 பேர் நாடு திரும்பினர்!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 539 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 8 விமானப் பயணங்களை மேற்கொண்டு இவர்கள் அழைத்து வரப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தொிவித்துள்ளார்.
மேற்படி வருகை தந்தவர்களில் 201 பேர் ஜோர்தானிலிருந்தும், 74 பேர் ஜப்பானிலிருந்தும் 65 பேர் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திலிருந்தும் 62 பேர் அவுஸ்திரேலியாவிலிருந்தும் வருகை தந்துள்ளனர்.
அவ்வாறே மேலும் 215 இலங்கையர்கள் நேற்று நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை!
அரிசி வகைகளுக்கான உச்ச நிலை சில்லறை விலைகள் நிர்ணயிப்பு!
சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!
|
|