வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 303 இலங்கையர்கள் இன்ற அதிகாலை நாடு திரும்பினர்!
Monday, November 23rd, 2020கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 303 இலங்கையர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி குவைத்திலிருந்து 283 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.00 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் கட்டார், தோஹாவிலிருந்து 18 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். அத்துடன், ஜப்பான் நரிட்டோவிலிருந்து இருவர் அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜெனீவா பிரேரணை: விசேட குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி!
சிறுமிகள் மீது பாலியல் வன்முறை: மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி !
பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|