வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 599 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, December 25th, 2020

கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 390 இலங்கைகளும் மெல்போர்னில் இருந்து 120 பேரும் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் இருந்து 69 பேரும் 6 பயணிகள் விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களின் பொருட்கள் விமான நிலையத்தில் வைத்தே கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து  நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: