வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Wednesday, July 15th, 2020

கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கான காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் இதுவரை 35 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் W.M.V.வன்சேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா 6 இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களின் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு அந்தந்த நாடுகளின் தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் W.M.V.வன்சேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுவரை 10 பேரின் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: