வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு!

வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் தலதா அத்துக்கோரள ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை பணியாளர்களின் குடும்ப சேமநலனுக்காக பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இங்கு உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஓமான், லெபானன், ஜோர்தான் ஆகிய நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் உயிரிழந்தவர்களுக்காக 72 மில்லியன் ரூபா இதன் போது வழங்கப்பட்டது. இந்த வருடத்தில் இவ்வாறான நிகழ்வுகள் 5 தடவை இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த போது உயிரிழந்த குடும்பங்களில் 196 பேருக்கு 345 மில்லயின் ரூபா இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் ஹர்ஷ டிசில்வா, அமைச்சின் செயலாளர் எசல வீரக்கோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|