வெளிநாடுகளில் இருந்து மேலும் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!

Friday, February 12th, 2021

வெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி 10 விமானங்களினூடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 108 பேரும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 102 பேரும் வேறு சில நாடுகளில் இருந்து ஏனையவர்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன் விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 24 மணிநேர பகுதிக்குள் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக ஆயிரத்து 693 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த காலகட்டத்தில், 50 ஆயிரம் கிலோ கிராம் பொருட்கள் இறக்குமதியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் 2 இலட்சத்து 95 ஆயிரம் கிலோ கிராம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டில் எந்தவித மருந்து தட்டுப்பாடும் கிடையாது - சில தரப்பினர் அரசியல் செய்ய முயற்சி என இராஜாங்க அம...
உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தில் மின் உற்...
முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதன் ...

தீர்வு கிடைக்காத நிலையில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்...
பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் நிபுணர் குழுவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜ...
மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் - அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அம...