வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்!

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 286 இலங்கையர்கள் இன்று (30) காலை நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் மெல்பேர்ன் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் ௲ 605 இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, இந்தியாவின் மும்பை நகரிலிருந்த இலங்கைப் படையினர் 18 பேரை ஏற்றிக்கொண்டு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான மற்றொரு விமானமும் இன்று (30) கட்டுநாயக்கவை வந்தடைந்தது.
நாட்டை வந்தடைந்துள்ள 304 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
சாரதிகளை பாதிக்கும் புதிய சட்டங்கள் தொடர்பில் வருகின்றது வர்த்தமானி !
கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் நீதி கிடைத்தாக வேண்டும் - பணிப்பாளர் சத்திய...
நாடுதிரும்பும் எதிர்பார்ப்பில் 40,000 இலங்கையர்கள் காத்திருப்பு - இராஜாங்க செயலாளர் D.V. சானக தெரிவி...
|
|