வெளிநாடுகளின் பூகோள அரசியல் தேவைக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க நான் தயாரில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்!

அதிகார பரவலாக்கல் மூலம் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதத்தை கொண்டு வர பலம்மிக்க நாடுகள் முயற்சித்து வருகிறது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்த நாடுகளின் பூகோள அரசியல் தேவையை நிறைவேற்றி நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க தான் எந்த வகையிலும் தயாரில்லை என்றுமு; குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை பிட்டபெத்தர பிரதேசத்தில் நடைபெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவம் குறைந்தன் காரணமாகவும் சரியான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினாலும் இப்படியான சம்பவம் நடந்தது என ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அனைத்து பக்கங்களிலும் உள்ளன. அடிப்படையாக தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது.
அடுத்ததாக சர்வதேசத்திற்கு சென்று ஜெனிவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்கி எமது நாட்டின் இறையாண்மை சுதந்திரத்தை முற்றாக இல்லாமல் செய்தனர்.
நாங்கள் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகினோம். இதனால், அவர்கள் எமக்கு எதிராக வேலை செய்கின்றனர். அது பரவாயில்லை. அதனை நாங்கள் எதிர்கொள்வோம்.
நாங்கள் சுதந்திரமான நாடு. எமது வேலைகளை எம்மால் செய்ய முடியும். நாங்கள் அச்சமின்றி அவற்றை எதிர்கொள்வோம்.
வேறு நாடுகளின் தாராளமயக் கொள்கை அதேபோல், இந்து சமுத்திரத்தின் பலமிக்க நாடுகளின் பிரச்சினைகளில் நாங்கள் தலையிடும் அவசியமில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|