வெளிநாடுகளின் அமைச்சர்களை சந்தித்த இலங்கையின் தலைவர்கள்!

Friday, June 14th, 2019

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

நேற்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இதன்போது, இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பல்வேறு விடயப்பரப்புகளில் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவது சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சந்திரா தாசும் கலந்து கொண்டுள்ளார்.

இதனிடையே எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைத்தீவின் இளைஞர் விவகார, விளையாட்டுத்தறை மற்றும் சமுக நலன் அமைச்சர் மஹமட் மஹருப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

விஜயராமயில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது இரண்டு நாடுகளிலும் நிலவும் தற்கால அரசியல் சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Related posts: