வெலிக்கடை சிறைச்சாலையில் மனநலம் குன்றிய ஒருவர் கொலை !

Wednesday, October 25th, 2017

வெலிக்கட சிறைச்சாலை வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோர் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் அபூபக்கர் எனும் குறித்த நபர், மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்ட கைதியின் தாக்குதலிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஆனாலும் உயிரிழந்த நபரின் மரண பரிசோதனையை செய்வதற்காக இதுவரை உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 011 2696950 அல்லது 077 7264299 என்ற இலக்கங்களுக்கு அறியத் தருமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

543210488dead-body--L

Related posts: