வெலிக்கடையிலிருந்து பூசாவுக்கு 150 கைதிகள் மாற்றம்!

Tuesday, June 25th, 2019

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த சிறைச்சாலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே, இவ்வாறு கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் கூறியுள்ளார்.

Related posts: