வெற்றிலையின் விலை உயர்வு!

Wednesday, September 26th, 2018

உற்பத்தி விலை அதிகரிப்பின் காரணமாக வெற்றிலையின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய 30 ரூபாய்க்கு விற்கப்படும் வெற்றிலை கூறு 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு, விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

வெற்றிலைக்கான உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக, வெற்றிலையை குறைந்த விலைக்கு விற்பதால், அதிகம் நட்டம் ஏற்படுவதை கருத்திற் கொண்டே வெற்றிலையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்ததாகவும் வெற்றிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: