வெப்பத்தை கட்டுப்படுத்தும் களஞ்சியசாலை – அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, August 2nd, 2018

விவசாய உற்பத்திப் பொருட்களை களஞ்சியப்படுத்தக்கூடிய வகையில் வெப்பத்தை கட்டுப்படுத்தும் வசதிகளுடனான களஞ்சியசாலையொன்று தம்புள்ளையில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த களஞ்சியசாலையை இந்தியா அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் மேற்கொள்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரசிங்க அவர்களும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களும் இணைந்து சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காய்கறி, வெங்காயம் போன்ற உற்பத்தி பொருட்களை நியாயமான விலையின் கீழ் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோருக்கு வசதி செய்யும் வகையிலும் அறுவடையின் போது இவற்றுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கும் இந்த விவசாய உற்பத்திப் பொருட்களை களஞ்சியப்படுத்தக் கூடிய வகையில் வெப்பத்தை கட்டுப்படுத்தும் வசதிகளுடனான களஞ்சியமொன்றை தம்புள்ளயில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

Related posts: