வெதுப்பக பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது – உற்பத்தியாளர் சங்கத்தின் தீர்மானம்!

Saturday, July 10th, 2021

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதற்கு, அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

செரண்டிப் நிறுவனத்தினால், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, ஒரு இறாத்தல் பாணின் விலையை எதிர்காலத்தில் 10 ரூபாவினால் அதிகரிப்பதாக அந்த சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என செரண்டிப் நிறுவனம் எழுத்துமூலம் உறுதியளித்துள்ளது.

இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பூரணப்படுத்திய படிவங்கள் 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்! - தேர்தல்கள் ஆணைக்குழு!
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வ...
ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது - ஜனாதிபதி உறுதியளி...