வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை – மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

வெதுப்பக உற்பத்திகள் எவ்வித விலை உயர்வும் இன்றி வழமையான விலையில் விற்பனை செய்யப்படும் என மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாகாண வெதுப்பக உரிமையளார்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் காமினி கந்தேகெதர, நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோது இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு இறாத்தல் பாணின் விலை இன்றுமுதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை 10 ரூபாவாலும், ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மனிதர்களை வேறுகிரகத்துக்கு சென்றுவிடுமாறு எச்சரிக்கிறார்: ஸ்டீபன் ஹாக்கிங் !
பனை வளம் தொடர்பில் இளம் சந்ததியினர் அக்கறை கொள்ளாதிருப்பது வேதனையளிக்கிறது - ஈ.பி.டி.பியின் தேசிய அம...
பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக் கொள்வதே ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு காரணம் -...
|
|