வெடி பொருட்கள் தொடர்பில் தொடர்ச்சியாக சோதனை முன்னெடுக்கப்படும்!

Saturday, May 18th, 2019

எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் சட்டவிரோத வெடி பொருட்களை வைத்திருப்பவர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக சோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்களுக்கு அவற்றை ஒப்படைப்பதற்காக கால அவகாசம் எதிர்வரும் 20ம் திகதி காலை 6 மணி வரை நீடிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த திகதியின் பின்னர் நாடு பூராகவும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சட்டவிரோத வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: