வெசாக் பூரணைத்தின அலங்கார காட்சிகள் ஊடகங்கள் வாயிலாக காட்சிப்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

இம்முறை வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு பத்திக் அலங்கார கூடுகள், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஒருவாரத்திற்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன
இதனை ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த பத்திக் அலங்கார கூடுகள், கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து மாநகரசபை வளாகத்தில் அலங்கரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு பொது மக்களின் பங்களிப்பின்றி பத்திக் வெசாக் அலங்கார கூடுகள், மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தம குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெடுந்தாரகை படகுச் சேவையில் கட்டணம் அறவிடப்படுவது குறித்து மக்கள் விசனம்!
சொந்த மக்களுக்கு என்ன செய்தது கூட்டமைப்பு? - அந்தக்கட்சி மாகாணசபை உறுப்பினர் சிவயோகம் கேள்வி!
நாம் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் வேலணை பிரதேச சபை பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது – தவிசாளர் கருணாகரகுர...
|
|