வெசாக் பண்டிகை வெளிப்புற நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Saturday, May 15th, 2021வெசாக் பண்டிகையினை முன்னிட்டு வெளிப்புற நிகழ்வுகள் மூலம் கொண்டாட எந்த அனுமதியும் வழங்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் வெசாக் பண்டிகையினை கொண்டாடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேலும் ஒருதொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!
வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்பு!
மாகாண சபைத் தேர்தலை நடத்த நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்!
|
|