வெசாக் பண்டிகைக்கு முன்னர் தேர்தல் இல்லை – மஹிந்த தேசப்பிரிய!

Thursday, February 2nd, 2017

எல்லை நிர்ணயம் தொடர்பில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டாலும் சட்டத்தில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காணப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெசாக் பண்டிகைக்கு முன்னதாக தேர்தல் நடத்த முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை வெளியிடுவது கால தாமதம் ஆகின்ற காரணத்தினால் வெசாக் பண்டிகைக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியாது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது பாராளுமன்றின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையாளர் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு கட்சியின் பிரதிநிதிகள் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

72964_dsc0524

Related posts: