வெசாக் கொண்டாட்டங்களை வீட்டில் இருந்து கொண்டாடுமாறு ஆலோசனை!

Thursday, May 13th, 2021

வெசக் பூரணை தினத்தை மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டு மகாநாயக்க தேரர்கள், விகாரைகள் மற்றும் வெளியிடங்களில் மக்களை ஒன்றுதிரட்டுதல், தானங்கள் வழங்குதல், வெசாக் அழங்கார தோரணைகளை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மக்கள் செயற்பட வேண்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் மேலும் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.

Related posts: